நெய் தான் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இது சிறந்த நன்மைகளை அள்ளி தருகின்றது. அதெப்படி சிறந்த நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம்.
- மென்மையான ஒளிரும் சருமத்தை கொடுக்கிறது.
- நெய் ஒரு இயற்கையான மாய்ஸ்ரைசர் ஆகும். இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது உங்க குடலை சுத்தப்படுத்துகிறது.
- இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு சுருக்கங்கள் மற்றும் பருக்களின் தோற்றத்தையும் குறைக்கும். ஒரு டீ ஸ்பூன் நெய்யை சாப்பிட்ட பிறகு கொஞ்சம் வெந்நீர் குடித்துக் கொள்ளுங்கள்.
- இந்த அற்புதமான நெய்யை தினமும் எடுத்துக் கொள்வது தமனிகள் போன்ற இரத்த குழாய்கள் தடினமாகுவதை தடுக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி செய்யும்.
- இது உங்க உடல் உயிரணுக்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைக் குறைக்கும்.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது.
- ஏனெனில் கெட்ட கொலஸ்ட்ரால் தான் நம் உடலை நச்சுத்தன்மையாக்குகிறது. நெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது.
- வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது உங்க தலைமுடியை பளபளப்பாக்க உதவும். இது மயிர்க்கால்களை தூண்டுகிறது.
- வேர்களை வலிமையாக்குகிறது. பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. எனவே ஆரோக்கியமான நெய்யை தினமும் சாப்பிடுங்கள்.